Friday, 18 March 2016

சுவாட் அமைப்பினால் ...




சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் எமது சுவாட்

அமைப்பினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தர சேவைகளை வழங்கும் முகமாக
தெரிவு செய்யப்பட்ட
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று,

அட்டாளச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருத, கல்முனை தழிழ் பிரிவு, கல்முனை

முஸ்ஸிம் பிரிவு, காரைதீவு, உகண ஆகிய 9 பிரதேசசெயலகங்களில் உள்ள வெளிநாட்டு

வேலைவாய்ப்பு பிரிவுகளுக்கு ரூபாய் 1,350,000.00 பெறுமதியான கணனி இயந்திரங்கள்

மற்றும் தளபாடங்கள், காகிதாதிகள் வழங்கும் நிகழ்வானது 14.03.2016ம் திகதி பி.ப 2.30

மணிக்கு சுவாட் அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் சுவாட் அமைப்பின் தலைவர்

திரு.Vபரமசிங்கம் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.K.பிறேமலதன்

ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு.துசித்த பி

விக்கிரமசிங்க அவர்கள் கலந்துகொண்டு இப்பொருட்களை வழங்கிவைத்தார். மேலும்

இந்நிகழ்வில் Planning Director, NGO Coordinator ,Divisional Secretary, Development officers , Zonal

Directors ,Probation Officers, RDHS ,MOH, Other NGOs ஆகியோர் கலந்துகொண்டு இந்

நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments: