Wednesday, 9 March 2016

ஆடைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையிட்டு

அம்பாறை நகரப்பகுதி, கண்டி வீதியிலுள்ள ஆடைகள் விற்பனை நிலையமொன்றின் கதவுகளை, நேற்று புதன்கிழமை (09) நள்ளிரவு உடைத்து
அங்கிருந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக  அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த கடை உரிமையாளர், வழமைபோல கடையை சம்பவதினம் இரவு பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று வியாழக்கிழமை (10) காலை கடைக்கு வந்தபோது கடையின் பின்பகுதிக் கதவை உடைத்து அங்கிருந்த 1 இலச்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: