நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின்படி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில்
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிகூடிய 09மாணவர்கள் 9ஏ அதிசிறப்புச்சித்திகளையும் மேலும் 08மாணவர்கள் 8ஏ1பி சித்திகளைப்பெற்று முன்னணியில் உள்ளனர்.
பற்றிமா கல்லூரி அதிபர் வண.பிதா.பிறெய்ன்செலர் தகவல் தருகையில் இதுவரை இலத்திரனியல்சாதனங்களினூடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இம்முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அவர்களது சரியான பெயர்விபரங்கள் நாளை தரப்படும். மேலும் பல நல்லமுடிவுகள் கிடைக்கலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைவிட கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் 05மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக அதிபர் வ.பிரபாகரன் தெரிவித்தார்.
காரைதீவில் 4பேருக்கு 9ஏ சித்திகள்!
காரைதீவுக்கோட்டத்தில் 04மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் இருவரும் விபுலானந்த மத்தியகல்லூரி மற்றும் சண்முகா மகா வித்தியாலயத்தில் தலா ஒருவருமாக மொத்தம் 4பேர் சிறப்புச்சாதனை படைத்துள்ளனர்.
சம்மாந்துறை வலயத்தில் 02பேருக்கு 9ஏ சித்தி!
சம்மாந்துறை வலயத்தில் இரு மாணவர்கள் இம்முறை 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள 15ஆம் கிராமம் திருவானூர் விவேகானந்தா மகா வித்தியாலய மாணவி பரமானந்தம் சசிரேகா மற்றும் இறக்காமம் கோட்டத்திலுள்ள இறக்காமம் அல்அஸ்ரப் மத்திய கல்லூரி மாணவி டபிள்யு.முபா ஆகியோரே 9எ பெற்றவர்களாவர்.
வலயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இருகோட்டங்களிலிருந்து இவ்விரு மாணவர்களும் தெரிவானமை முக்கியவிடயமாகும்.அவர்களை வ லயம் சார்பாக வாழ்த்துவதாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.
திருக்கோவில் வலயத்தில் இருவருக்கு 9ஏ சித்தி!
திருக்கோவில் வலயத்தில் இரு மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுள்ளனர். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் ஆலையடிவேம்பு இராமகிருஸ்ணா கல்லூரியில் ஒரு மாணவியும் 9ஏசித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள் என திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.
(வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment