Friday, 11 March 2016

வாகனம் விபத்து 200கோழிகளும் உயிரிழந்தன

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்ததுடன் 200கோழிகளும் உயிரிழந்தன.

இன்று(11) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கன்ரர் மோதிய பனைமரம் அடியோடு வீழ்ந்துள்ளதுடன் சாரதியும் வாகன உரிமையாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்;.பரீட் மற்றும் உதவியாளர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.

பிபிலையில் இருந்து பொத்துவிலுக்கு சென்று அங்கு கோழிகளை ஒப்படைத்துவிட்டு அக்கரைப்பற்றுக்கு திரும்புகையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரதான வீதியை திடீரென கடக்க முயன்ற மாடுகளுக்கு இடம் கொடுக்க முயலுகையிலேயே இவ்வாறு நடைபெற்றதாக வாகனத்தின் சாரதி தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: