காணாமல் போனேரின் உறவுகள் தமது உறவுகளுக்கு நீதி கேட்டு "காணாமற் போகச் செய்தலை காணாமற் போகச் செய்வோம்" "ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்" எனும் தொனிப் பொருளில்; காணமால்போனோர்களின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்புஆர்ப்பாட்டபேரணி; இன்று30 ம் திகதி புதன்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது
'காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம்', 'ஜெனீவாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்' எனும் தொனிப்;பொருளில் காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள்;, அங்கிருந்து அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு பேரணி முடிவுற்றது
காணாமல் போனேரின் உறவுகள் நீதிகேட்டு மாபெரும் கவனயீர்ப்புபேரணி
அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து; அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 9.30மணிக்கு அக்கரைப்பற்று சாகாம வீதி மற்றும் அம்பாறை வீதி மற்றும் பொத்துவில் வீதிஆகிய இடங்களில் இருந்துஆர்ப்பாட்டபேரணியைஆரம்பி த்துஅக்கரைப்பற்றுநகர் மணிக் கூட்டுக் கோபுரத்தில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணியினர் கல்முனை வீதியூடாக நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்துகொண்டு.
தமது தலையில் எமதுஉறவுகள் எங்கே எனும் எழுத்து பொறிக்கப்பட்ட எழுத்து கறுத்தபட்டி அணிந்து எமது பிள்ளைகள், கணவன், மனைவிகள். இருக்கின்றனரா?
இருப்பார்களென்றால் எங்கே?
கொல்லப்பட்டார்களேயானால் ஏன் கொன்றார்கள்? யார் கொலைசெய்தது?
ஏங்கேபுதைத்தீர்கள்? ,
இதன் போல் காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனிவாவாக்குறுதிகளைநிறைவேற்று, எமது கணவன்மார்கள், எமது உறவினர்கள்,அவர்கள் குற்றம் புரிந்தாலும் புரியாவிடினும் அவர்களை காணாமல்போகச் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை,
குற்றம் புரிந்தவர்கள் என்றால் சட்டத்தின் பிரகாரம் தண்டனைகொடுக்கமுடியும்
ஆனால் காணாமற் போகச் செய்ய முடியாது,
எமது அன்புக்குரியவர்களுக்கு நடந்ததை அறிய ஒரு தாயாக,மனைவியாக,பிள்ளையாக,உறவி னராக முற்று முழுதான உரிமை உண்டு,
மைத்திரிஅரசாங்கம் ஜெனிவாவில் இது தொடர்பாக சில வாக்குறுதிகளை கொடுத்தது அதில் நடந்த உண்மைகளை வெளிப்படுத்துங்கள், நீதியை நிறைவேற்றுங்கள், நியாயமான இழப்பீட்டை பெற்றுக் கொடுங்கள், மீண்டும் காணாமற் போகச் செய்யும் சம்பவங்களை தடுத்துவிடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டசுலோகங்கள் ஏந்தியவாறு
கல்முனை பிரதான வீதி ஊடாக அக்கரைப்பற்று அதாவுல்லா நகரமண்டபத்தை சென்றடைந்து ஆர்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்
இதன் பின்னர் பிற்பகல் இடம் பெறவுள்ள கூட்டத்தில் அதிதிகளாக கலந்து கொண்ட அமைச்சர் மனோகணேசன், அமைச்சர் மங்கள சமரவீர விடம் மகஜர்களையும் கையளித்தனர்
No comments:
Post a Comment