Friday, 4 March 2016

பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் வைபவம்


ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கீர்த்தி பெற்ற ஒரேயொரு சிவாலயமான அக்கரைப்பற்று, பனங்காடு, அருள்மிகு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தின் வடக்கு எல்லைக்கான புதிய சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத் தலைவர் எஸ்.ரகுதேவன் தலைமையில்
இன்று (04) காலை ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமான சமயச்சடங்குகளை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ மூர்த்தீஸ்வரக் குருக்கள் நடாத்திவைத்தார்.

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் குறித்த சுற்றுமதிலுக்கான கட்டுமான வேலைகளின் ஆரம்ப நிகழ்வான இதில் பிரதேச செயலாளருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோரும் இணைந்து  ஆலயத் தலைவரதும் அறங்காவலர் சபை அங்கத்தவர்களதும் பங்குபற்றுதலோடு சுபவேளையில் அங்கு அடிகற்களை நட்டுவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.











No comments: