கிழக்கு
மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாதாந்தக்
கொடுப்பனவு பெற்றுவரும் வலுவிழந்தோருக்கு வீடமைப்பு வசதிகளை
ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் தெரிவுசெய்யப்பட்ட நான்கு பயனாளிகளுக்கான முதற்கட்டக்
கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச
செயலக சமுக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் குறித்த பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
உதவிப்
பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்
ஏ.தர்மதாஸ, தொழில்நுட்ப உதவியாளர் என்.சுதர்சன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஆர்.சிவானந்தம் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூவர்
வீடமைப்புக்கான கொடுப்பனவுகளையும், ஒருவர் வீட்டைத் திருத்தியமைப்பதற்கான
கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment