Tuesday, 2 February 2016

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள்

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், இனந்தெரியாதவர்களால் நேற்று  முன்தினம்  (30) இரவு திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.



 அலுவலகக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுவலகத்தில் இருந்த நிரப்பப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்துவப்படிவங்கள், பொதுமக்கள் தமது தேவைகள் குறித்து அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கிய கோகிக்கைக் கடிதங்கள் மற்றும் கணினியின் ஹாட்டிஸ்க் என்பனவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: