Thursday, 18 February 2016

மாணவனின் சடலம் மீட்பு


அம்பாறை, அக்கரைப்பற்று கடலில் நேற்று புதன்கிழமை நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம், தம்பட்டை முகத்துவாரக் கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று 13ஆம் பிரிவைச் சேர்ந்த ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினரும் அப்பிரதேச மீனவர்களும் ஈடுபட்டிருந்த வேளை காலநிலை மாற்றத்தால் கடல் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தேடுதல் முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. இந்நிலையிலேயே, குறித்த சடலம் கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  

No comments: