Thursday, 11 February 2016

, இராணுவ முகாம்கள்; பொலிஸ் உப நிலையம் அகற்றப்பட்டது,

, ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுனை கமநலச் சேவை நிலையக் கட்டடங்களில் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட விசேட அதிரடிப்படை, இராணுவ முகாம்கள்; மற்றும் பொலிஸ் உப நிலையம் அகற்றப்பட்டு, கமநலச் சேவைகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமநலச் சேவை பிரதேச உத்தியோகஸ்தர் ஏ.எல்.அஸ்ரப்,
வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், பாலமுனை கமநலச் சேவை நிலையம் ஒலுவிலில் திங்கட்கிழமை (08) முதல் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
முகாம்களும் பொலிஸ் உப நிலையமும் காணப்பட்ட காலப்பகுதியில் பாலமுனை கமநலச் சேவை நிலையம்  பாலமுனைக் கிராமத்தில் இயங்கிவந்தது. தற்போது இக்கமநலச் சேவை நிலையம் ஒலுவிலுக்கு நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்நிலையத்தினால் பாலமுனை, ஒலுவில் பிரதேச விவசாயிகள் பெரிதும்  நன்மையடைவார்கள் எனவும் அவர் கூறினார்.


No comments: