Tuesday, 2 February 2016

20ஆயிரம் ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின்  பேரில்  கைது   செய்யப்பட்ட இருவருக்கு  தலா   20ஆயிரம் ரூபாய் அபராதம்


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி. நளினி கந்தசாமி, நேற்று  திங்கட்கிழமை  (01)  விதித்துள்ளார்.

 ஒலுவில் பள்ளக்காட்டுப்  பிரதேசத்தில் அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர்கள்  நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை  கைது  செய்யப்பட்டிருந்தனர்.

 குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்தபோது இரு நபர்களுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். 

No comments: