Monday, 29 February 2016

சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு காலங்கடந்த திருமணப் பதிவுகள் வழங்கிவைப்பு


இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய காலங்கடந்த திருமணங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில்

Friday, 26 February 2016

சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள்



அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின்அம்பாறை  மாவட்டத்துக்கான அமர்வுகள் நாளை 27ஆம் திகதி  சனிக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேசமட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்

Wednesday, 24 February 2016

அம்பாறை மாவட்ட தமிழ் மொழி தொண்டராசிரியர் குழுவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (23) கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

Thursday, 18 February 2016

மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற உற்பத்தியாளரை கௌரவிக்கும் வைபவம்


மாணவனின் சடலம் மீட்பு


அம்பாறை, அக்கரைப்பற்று கடலில் நேற்று புதன்கிழமை நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம், தம்பட்டை முகத்துவாரக் கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று 13ஆம் பிரிவைச் சேர்ந்த ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினரும் அப்பிரதேச மீனவர்களும் ஈடுபட்டிருந்த வேளை காலநிலை மாற்றத்தால் கடல் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தேடுதல் முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. இந்நிலையிலேயே, குறித்த சடலம் கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  
இந்தியாவில் இருந்து ஹரன்..
12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கோலாகலமாக குவாத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

Wednesday, 17 February 2016

தம்பட்டை நெற்களஞ்சியசாலையில் இடம்பெற்ற மகாபோக நெற்கொள்வனவு வைபவம்


திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை கிராமத்திலுள்ள நெற்களஞ்சியசாலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள பெரும்போக நெற்தொகுதியைக் கொள்வனவு செய்யும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று (17) காலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்கவின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

Monday, 15 February 2016

புதிய துவிச்சக்கரவண்டி தரிப்பிடமும் கரப்பந்து மைதானமும் திறந்துவைப்பு


சுவாட் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட திட்ட அமுலாக்கம் தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு

சர்வதேசத் தொண்டு நிறுவனமான UNDPயின் அனுசரணையுடன் அரச சார்பற்ற உள்நாட்டு அமைப்பான சுவாட் எனப்படும் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் ஆலையடிவேம்பு உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாவட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் (SDDP) வேலைத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட 20 கிராமமட்ட அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களை வலுவூட்டும் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


Friday, 12 February 2016

வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்குக் கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்றது.


Thursday, 11 February 2016

, இராணுவ முகாம்கள்; பொலிஸ் உப நிலையம் அகற்றப்பட்டது,

, ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுனை கமநலச் சேவை நிலையக் கட்டடங்களில் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட விசேட அதிரடிப்படை, இராணுவ முகாம்கள்; மற்றும் பொலிஸ் உப நிலையம் அகற்றப்பட்டு, கமநலச் சேவைகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமநலச் சேவை பிரதேச உத்தியோகஸ்தர் ஏ.எல்.அஸ்ரப்,

Monday, 8 February 2016

புளியம்பத்தை கிராமத்தில் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் கோரிக்கைக்கமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான இஸ்லாமிக் ரிலீfப் அமைப்பினரால் கையளிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை வறிய மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு சின்னப்பனங்காடு, புளியம்பத்தை கிராமத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்றது.


பனங்காடு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கட்டுப்பாட்டுச் சபைக்கு அங்கத்தவர்கள் நியமனம்

ஆலையடிவேம்பு தெற்கு வலயத்துக்கான பனங்காடு, வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான கட்டுப்பாட்டுச் சபை அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான பொதுச்சபைக் கூட்டம் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


Wednesday, 3 February 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும்

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 68ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.


Tuesday, 2 February 2016

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விழிப்புணர்வு கருத்தரங்கு

காரைதிவு நிருபர் 



இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித அபிவிருத்தி தாபனம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து காரைதீவு பிரதேச செயலகத்தின் வேண்டுதலில் பிரகாரம் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று  நடைபெற்றது. 

மோட்டார் குண்டுகள் மீட்பு ..

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (01)  மாலை மூன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள்

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், இனந்தெரியாதவர்களால் நேற்று  முன்தினம்  (30) இரவு திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

20ஆயிரம் ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின்  பேரில்  கைது   செய்யப்பட்ட இருவருக்கு  தலா   20ஆயிரம் ரூபாய் அபராதம்

Monday, 1 February 2016

முத்தையா கதிர்காமநாதன் இன்று காலை காலமானார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று காலை காலமானார்.
இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது....


திருக்கோவில் வலயதிட்குட்பட்ட அக்கரைபற்று இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தின் தொழில் நுட்ப ஆய்வு கூடம் (01.02.2016) 1.20 மணியளவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (01) காலை இடம்பெற்றது.