சாந்தன் ...
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பாலத்தினுள் ஆணின் சடலமொன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் ஹிக்கடுவையைச் சேர்ந்த இலண்டன் பிரஜையான விசாந்த சுப்பரமணியம் (வயது 24) என அடயாளம் காணப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் திங்கட்கிழமை பொத்துவில் அறுகம்பையிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் இரண்டாம் இலக்க அறையில் இவர் தனியாகவே தங்கியிருந்துள்ளார்.
தங்கியிருந்த அறையிலிருந்து கைக் கடிகாரம் ஒன்றும் இலங்கைப் பணம் வங்கி விசா கிரடிற் கார்ட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment