அம்பாறை, மல்வத்தை, மல்லிகைத்தீவு காட்டுப் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை எலும்பு கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காணாமல்போனதாகக் கூறப்படும் மகாலிங்கம் வேலாயுதம் (வயது 50)என்பவரின் எலும்புக்கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பபெற்ற தகவலொன்றினையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த எலும்பு கூடை மீட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று காணாமல் போயிருந்த மல்வத்தை 1 தம்பிநாயகபுரத்தைச் சேர்ந்த தனது கணவரே என எலும்புக் கூட்டில் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அவரது மனைவி அடையாளம் காட்டினார்.
பரிசோதனைக்காக எலும்புக் கூடு அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment