8ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.இவரது பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா வழிமொழிந்தார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாயநாயக்க தெரிவித்தார்.
45 அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அதில் 33 ஐ.தே.க உறுப்பினர்களும் 12 ஐ.ம.சு.கூ உறுப்பினர்களும் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment