Wednesday, 30 September 2015

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில்  செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



செவ்வாய்க்கிழமை மாலை 6.30மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாகச்சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: