Friday, 1 September 2017

ஞானவைரவர் ஆலய இன்று (02) எண்ணைக்காப்பு

 மாவிடடபுரம் செருக்கன் கிணற்றடி அருள்மிகு ஞர்னவைரவர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  03ம்  திகதி ஏவிளம்பி வருடம் ஆவணித்திங்கள் 18ம் நாள்  ஞாயிற்றுக் கிழமை உத்தராட நட்ஷத்திரமும் அமிர்தயோகமும் துவாதசி திதியும் கூடிய சுபவேளையில் காலை 07.45மணிமுதல் 08.52மணிவரையுள்ள கன்னிலக்ன  வேளையில்   இடம் பெறவுள்ளது 

 250ஆண்டுகளுக்கு மேல் சிவ யோகசுவாமிகளின் மூதாதையார்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தின் அருகாமையில் 1872ல் அவதரித்த சிவ யோகசுவாமிகளினால்   சிறுவயதுமுதல் வழிபாடு ஆற்றிவந்த இவ் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கதும் தன்னை நாடிவரும் பக்த்தர்களின் துயர் அகற்றி கேட்ட வரத்தினை வழங்கும் ஆற்றல் கொண்டு அருளாசி புரிந்து வருகின்ரார் 

கடந்த யுத்தகாலத்தில் சேதமடைந்த  இவ் ஆலயம் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலய்த்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சிவ யோகசுவாமிகளின் பரம்பரை வழித் தோற்றத்தினரால் இன்று புனரமைக்கப்படு புதுப்பொலிவுடன்  கும்பாபிஷேகம்கான தாயாராகவுள்ளார் 

இவ் நிகழ்வுகள்  பிரதிஷ்டா பிரதம குரு கிரியா பூஷணம் ,சகலாகம சங்கிரகர் ,சிவப்பிரமஸ்ரீ  துரை உமாசங்கரக்குருக்கள் மற்றும்  ஆலய குரு  பிரம்ம ஸ்ரீ ச.ஈஸ்வரஸர்மாவினாலும் இடம் பெறும்   பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் 01ம் திகதி வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி தொடர்ந்து  எண்ணைக்காப்பு சார்த்தும் தெய்விக நிகழ்வுகள்  02ம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணிமுதல் இடம்பெறும்
 மறுநாள் காலை கும்பாபிஷேக்கம் இடம் பெற்று  தொடர்ந்து 12நாட்கள் மண்டலாபிஷேக பூசைகளுடன்  எதிர்வரும் 14ம் திகதி சங்காபிஷேக்கமும் அடியார்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

haran

No comments: