Tuesday, 26 September 2017

ஆலையடிவேம்பில் மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான காசோலைகள் கையளிப்பு




தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊருக்கு ஒரு கோடி மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் குறித்த திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிட மற்றும் இந்து ஆலய நிர்மாணிப்பு வேலைகளுக்கான முதற்கட்டக் கொடுப்பனவாக தலா ஐம்பதாயிரம் ரூபாய்களுக்கான காசோலைகள் அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் ஏழு இளைஞர் கழகங்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.











No comments: