Thursday, 21 September 2017

மாடு மோதி விபத்து

haran

(சசி)
மட்டக்களப்பு தாழங்குடா தேவாலயத்திற்கு அண்மித்த பிரதான வீதியில் 2017.09.21 இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடு ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டி பாதையில் இருந்து தள்ளப்பட்டு பாரிய விபத்துக்குள்ளாகியது.


இதில் பயணித்த யுவதி ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி ஆரையம்பதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வண்டி ஓட்டுனர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பழுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்று மீண்டும் பழுகாமத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் இவ்விபத்தானது ஏற்பட்டுள்ளது.









தாழங்குடாவில் முச்சக்கர வண்டி கோர விபத்து Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: