Saturday, 16 September 2017

யானைகளினால் வீடுகளுடன் , குடும்பஸ்தர் ஒருவரும் பாதிப்பு

haran
(க.விஜயரெத்தினம்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் சனிக்கிழமை (16.9.2017) அதிகாலை 1.00 உள்நுழைந்த 10 மேற்பட்ட யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால்  சின்னவத்தையில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. வறுமைப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு  செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்து, நெல்லை மூடைகளில் சேமித்து தங்களின் குடிமனைகளில் வைத்துள்ளார்கள்.


நெல்லை சாப்பிடுவதற்கு பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி வந்து குடிமனைகளை சேதப்படுத்தி  அங்கிருக்கும் நெல்லை சாப்பிட்டுள்ளது.இச்சம்பவத்தில் 13 நெல்மூடைகளையும்,ஐந்து வீடுகளையும் பகுதியளவில்  சேதப்படுத்தியுள்ளது.

மேலும் நித்திரையில் தூங்கிக் கொண்டிருந்த சின்னவத்தை கிராமத்தை சேர்ந்த விஸ்வலிங்கம்- சுபாஸ்கரன்(வயது 22)என்பவர் யானைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.இதனால் படுகாயமடைந்த சுபாஸ்கரன் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலினால் வெல்லாவெளி பிரதேசத்தில் விவசாயிகள்,பொதுமக்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்பட்டுவருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments: