Wednesday, 27 September 2017

பற்றைக் காடுகள் அழிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் காட்டு யானைகள் பதுங்கி நிற்கும் பற்றைக் காடுகள் இன்று (புதன்கிழமை) துப்பரவு செய்யப்பட்டன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவிடம் இளைஞர் விவசாயத் திட்டக் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த பற்றைக் காடுகள் பக்கோ இயந்திரத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்டன.

சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த பற்றைக் காடுகள் உள்ளதாகவும், இதுவரை காலமும், கவனிப்பாரற்று இருந்த விடயம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதால் கிராம மக்கள் யானைகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
haran

No comments: