Saturday, 16 September 2017

கொடிது கொடிது வறுமை கொடிது

நமது ஆசிரமம் ஆனது மனித முயற்சியால் ஆனதல்ல சாதாரண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு உள்ளாகி இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையில் ஒரு குருநாதரைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு சற்குருதேவர் கிடைக்கப்பெற்றார். இந்த யாத்திரை காலங்களில் எல்லாம் நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. 'கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது இளமையில் வறுமை கொடிது' என்று ஒளவைப்பாட்டி சொல்லியிருக்கிறார்.
ஒருகாலத்தில் நாம் படுத்திருப்பது ரெயில்வே ஸ்டேசன். ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லை. ஸ்நானம் பண்ணி மாற்றிக் கட்டிக்கொள்ள உடுப்பு இல்லாமல் திக்கற்ற நிலையில் அனாதையாக தெருவில் இருந்த ஏழை என்று தான் சொல்ல வேண்டும். அதை நான் சொல்வதை கேட்டு நீங்கள் புரிந்து கொள்ள முடியாது நான் அதை அனுபவித்து தான் சொல்கிறேன்.
என்னுடைய முயற்சியால் எத்தனையோ மகானுபவர்களைஇ சித்தர்களைஇ மகரிஷிகளை எல்லாம் கண்டு இறுதியில் என்னை ஒரு மகரிஷி ஆட்கொண்டார். எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால் நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்.

நீலகிரி மலைச்சாரலில் அங்கு சில காலங்கள் இருந்து அங்கு அகஸ்திய மா மகரிஷியிடத்திலிருந்து. நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி என்னுடைய மூல குரு அகஸ்திய பெருமான் அவரிடம் 24 வருடங்கள் ஆன்மீகக் கல்வி பயின்று என் குருநாதர் ஆத்ம ஞானம் பெற்றார்.

அகஸ்தியப்பெருமானின் ஆச்சிரமத்தில் இருக்கும் போது அவருடைய உத்தரவின் பெயரில் என் குருதேவர் கண்ணையாயோகீஸ்வரர் தொடர்பு பெற்று அவரிடத்தில் 30 ஆண்டுகள் ஆத்மஞானம் பயின்றேன் அவரிடத்தில் நான் பயிற்சி பெற்ற காலங்கள் எல்லாம் பயங்கர காடுகளிலும் மலைகளிலும் ஆங்காங்கே சாதனை பயிற்றுவித்தார்.

அந்த பயிற்சி மூலம் எல்லா சித்திகளையும் பெறச் செய்து ஆசி கூறி காயத்திரி மந்திரத்தை மண்ணுலகம் பூராக பரப்பி வா என உத்தரவின் பேரில் நுவரெலியாவில் காயத்திரி பீடத்தை ஸ்தாபனம் பண்ணினோம். இந்த மகா மந்திரமானது பல்லாயிரம் ஆண்டுகள் சுயநலவாதிகளால் மண்ணுலக சாதாரண மக்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. இந்த மறைக்கப்பட்ட மந்திரம் அனைவருக்கும் சேர வேண்டும். ஒரு சிலர் தான் ஜெபிக்க வேண்டும்இ பிராமணர்கள் தான் ஜெபிக்க வேண்டும் ஏனையோர் ஜெபித்தால் பாவம் வரும்இ சாபம் வரும் என மண்ணுலக மக்களுக்கு அந்த எண்ணத்தை வேர் ஊன்றச் செய்து விட்டார்கள்.

இதை அறிந்த நமது குருநாதர் இந்த மண்ணுலகத்திற்கு காயத்திரி மந்திரத்தை விட சிறந்தது இல்லை அவர்களுடைய துன்பங்கள் கஷ்டங்கள் செய்வினை கோளாறுகள் எதிர்ப்புகள் கிரகப்பிரபாவங்கள் வறுமை சாக்காடு இத்தனைகளிலும் இருந்து நீக்கி அவர்கள் சிரஞ்சீவியாக பூதவுடல்தாங்கி மண்ணுலகத்தில் உடல் தாங்கி வாழும் வரை வாழ்ந்து அடைய வேண்டிய பொருளான ஆண்டவன் திருவடியை அடைவதற்கு காயத்திரி மந்திரம் தான் சிறந்தது.

என் நேரமும் வகுப்பு நடக்கும் போதெல்லாம் பல அற்புதங்கள் எல்லாம் செய்யும் படியாக வித்தைகள் எல்லாம் கற்றுத் தந்தார் அத்தனைகளையும் நாங்கள் புத்தக வடிவில் 35இ 40 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.

கட்டுரைகள் முலம் மனித அறிவுக்கும் எட்டாத சிந்தனைகளால் புரிந்து கொள்ள முடியாததும் விஞ்ஞானிகளாளல் கண்டு பிடிக்க முடியாததும் பல அற்புத ஆத்ம இரகசியங்களை எங்களுக்கு வஞ்சகம் இல்லாமல் கற்றுக் கொடுத்தார். அவரை சாதாரணமாக எவரும் யோகி என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அவர் கல்யாணம் கட்டியிருந்தார்.

மனைவி மக்கள் அவரை யோகி என்றே புரிந்து கொள்ளவில்லை இலை மறை காய் போல மக்களிடத்தில் வாழ்ந்தார். நானும் கூட அவரை ஒத்துக்கொள்ளவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய வாழ்க்கையை பார்த்தாலும் நடைமுறையை பார்த்தாலும் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ஆனால் சப்த ரிஷிகளில் ஒருவரான ரிஷி உத்தரவிட்டு இன்னாரிடம் போ என்று சொன்னாரே அதனிடத்தில் ஏதாவது இருக்கும் என்ற எண்ணம் என் அடி மனதில் தோன்றி அவருடைய பாதார விந்தத்தை நாம் பற்றி 30 ஆண்டுகள் அவரிடத்தில் கற்று தீட்சை பெற்று ஆத்மஞானம் பயின்று ஆசிபெற்று மக்களில் ஒருவனாக அடியார்களுக்கு அடியாராக வாழ்ந்து இப் பணியை பரப்பு எனும் அவரின் கூற்றுக்கிணங்க நுவரெலியா தம்பிலுவில் நாவலடி திருகோணமலையில் உலகலாவிய பல நாடுகளிலும் ஸ்தாபனம் செய்து இக் காயத்திரி மகா மந்திரம் ஜெபிக்கப்பட்டு வருகிறது.

அரும் பெரும் சித்திகள் பெற்று மாணவர்களாக சீடர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி மேல் நாடுகளில் இருந்து பலர் இங்கே வந்து அவர்களுடைய அனுபவங்களையும் அற்புதங்களையும் பக்தர்களுக்கு சொல்லிச் செல்கின்றனர் கும்பாபிஷேகத்திலும் கூட தென்னாபிரிக்காவில் இருந்து ஜேர்மனியில் இருந்து இங்கு வந்து அவர்கள் தீட்சை பெற்று அப்படிப்பட்ட சிறந்த விலை மதிக்க முடியாத ரெத்தினம் போன்ற காயத்திரி மகா மந்திரம் மகரிஷிகளிடத்தில் இருந்து நமக்கு கிடைத்துள்ளது. யாரும் நமக்கு உபதேசம் பண்ணவில்லை அவர்களின் அடிச்சுவட்டை பின் பற்றி கடும் தவம் பண்ணி பல இலட்சம் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து அந்த நுவரெலியா ஆச்சிரமம் அமைக்கப்பட்டது. உலகத்தில் பல பாகங்களிலும் இருந்து ஜாதி மத பேதமில்லாது இலட்சோபலெட்ச மக்கள் வந்து இந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுகிறார்கள். பிற மதத்தவர்கள் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுகிறார்கள். அற்புதமான சித்திகளை பெற்று இன்றும் அமெரிக்க நாட்டிலும் மேல் நாட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஆவர்கள் கூடிய சீக்கிரத்தில் இங்கு வருவார்கள். வந்து வந்து போவார்கள்.

ஆதலால் பக்தர்களே இன்றைய சூழ்நிலையில் உலகம் இன்று அழிவுப்பாதையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது மனித இனம் மனிதன் மனித உருவில் நடமாடும் பயங்கர பிராணியாக வாழ்கிறான். பயங்கர பிராணியாக வாழும் மனிதனை தெய்வமாக்கவல்லது காயத்திரி மகா மந்திரம் இதனை ஜெபித்துணர்ந்தவர்களுக்குத்தான் மகிமை சக்தி தெரியும். அதன் மகிமையை சாதாரண மக்களால் இதை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டம்.

இராமானுஜர் என்று ஒருத்தர் இருக்கிறார். திருச்சியில் அவருடைய குருநாதர் சிறந்த சீடர் என்ற முறையில் இந்த காயத்திரி மந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்து அருகில் அழைத்து இராமானுஜா உனக்கு விலை மதிக்க முடியாத பொக்கிசமாகிய காயத்திரி மந்திரத்தை நான் உனக்கு உபதேசம் செய்கிறேன் இதை ஜெபித்து நீ உய்வாயாக பிரம்ம சாட்ஷாக்கார நிலையை அடைவாயாக இறைவனோடு இரண்டறக் கலந்து நிலையான மாறாத திகட்டாத பேரின்ப அனுபவத்தை பெறு என ஆசி கூறினார்.

இவ் மந்திரத்தை பிறருக்கு உபதேசித்தாயானால் நீ பாவத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி தலை வெடித்து இல்லாவிட்டால் புற்று நோய் உண்டாகி இப்படி எல்லாம் செத்து மடிவாய். இராமானுஜர் என்ன நினைத்தார் பரவாயில்லை இலட்சோபலெட்ச மக்கள் துன்பப்படுகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் எனக்கு மட்டும் ரெத்தினம் போன்ற விலை மதிக்க முடியாத மந்திரம் இதை நான் மட்டும் அனுபவித்து என்ன செய்வது. துன்பப்பட்டு தலை வெடித்து புற்று நோய்க்கு ஆளாக்கி அவதிப்பட்டால் பரவாயில்லை லெட்சோப மக்கள் நன்மையடைய வேண்டும் என உறுதி பூண்டு ஸ்ரீரங்க கோபுரத்தில் மேல்ஏறி காயத்திரி மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் பண்ணினார்.

அது போல் நாம் ஜெபித்து பெற்ற இன்பத்தை ' நாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்' என்று தாயுமானவர் பாடியுள்ளார். 'எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரனே' என்று ஒரு மகான் பாடியுள்ளார். 'எவன் ஒருவன் ஏழைகளிடத்து இறைவனை காண்கின்றானோ அவனே மகான்.' என்று விவேகானந்தர் சொல்லியுள்ளார். 'தரித்திரவான்களே பாக்கியவான்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.' என்று யேசு பிரான் சொல்லியுள்ளார்.

இப்படி காலையிலும் கூட நமது குருக்கள் ஐயா அவர்கள் இது பணக்கார கோயில் ஏழைகளுக்கு இடமில்லை என்பார்கள். நாங்கள் ஏழைகள் மத்தியிலே வாழ்கிறோம். இந்த உபதேச நெறியை பின்பற்றி வாழ்கிறோம்.

இவ்வாலயம் எமக்கு சொந்தமான ஆலயமே இல்லை அடிக்கடி நாம் சொல்வது இது உங்களுடைய ஆசிரமம் உங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட ஆசிரமம் நீங்களெல்லாம் காயத்திரி குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் காயத்திரி மந்திரம் தெரியும் என நினைக்கிறேன். காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வாருங்கள் மலை போல வரும் துன்பங்கள் பனிப்போல கரைந்து பரவசமடைவீர்கள் துக்கம் நீங்கி ஆனந்தம் பெறுவீர்கள் உங்கள் முகத்தினை பார்த்தவுடன் காயத்திரி மந்திரம் ஜெபிப்பவர்கள் என மற்றவர்கள் உணருமளவுக்கு உங்கள் முகம் பிரகாசமாக தெரியும் பிரம்ம தேஜஸ் உண்டாக்கும் வாக்கு வன்மை உண்டாக்கும் நாம் பார்த்தால் அருள் பார்வையாக இருக்கும். இப்ப நம்ம பாக்கிற பார்வையெல்லாம் அவர் பார்வையில படக்கூடாதப்பா கண் திருஸ்டி பட்டிரும் அவர் கால் வைத்தால் வீடு குட்டிச் சுவர் ஆகிவிடும் இது சாதாரணமாக இவ் வார்த்தை எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து கூறுவதுண்டு காயத்திரி மகா மந்திரம் ஜெபிப்பவன் எந்த வறுமையாலோ தோஷத்தாலோ கிரக பாவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைப்பானானால் சகல தோஷங்களும் நீங்கி தீராத பயங்கர வியாதியால் பீடிக்கப்பட்டு வைத்திய வல்லுனர்களால் கைவிடப்பட்டவனைப் பார்த்து அற்புதமான காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கும் போது அவன் அதிலிருந்து இருந்து சுகம் பெறுவான் இது எமது அனுபவத்தில் பெற்றது.

உலகளாவிய ரீதியில் நிறைய பேர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்வார்கள்

நோய் என இங்கு நாங்கள் மானசிகமாக அவர்களை நினைத்து பிரார்த்தனை பண்ணும்போது சுகம் ஆகும். இப்படி அற்புதமான காயத்திரி தேவியை எழுந்தருளப் பண்ணி தேவி காயத்திரி மாதா நான்கு வேதங்களிலும் தாயே பிரம்மா விஷ்ணு சிவனில் பிரகாசிப்பவளே பிராண மாதா காயத்திரி கற்பக விருட்சமாக இருந்து அனைத்தும் கொடுத்து அருளக்கூடியவளே காமதேனுவாக இருந்து எல்லா ஐஸ்வரியங்களையும் கொடுத்து காப்பவளே ஆபத்து காலங்களில் அன்னை போல் அணைத்து காப்பவளே பிராணமாதா நீ சிரஞ்சீவியாக இவ் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி அருள் ஆட்சியை செலுத்தி அருள் சக்தியை பிரகாசித்து நாடிவரும் பக்தர்களையெல்லாம் ரட்சித்து கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து அருள வேண்டும். அணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனை.

 24.09.2017 அன்று காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமியின் 10வது சமாதி தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.


காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளினது காயத்திரி மந்திரத்தின் மகிமை பற்றிய உபதேசம்! அவரின் உரை நடையில்!! Rating: 4.5 Diposkan Oleh: Ravindramoorthy
haran

No comments: