haran
இந்துக்கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் துறைநீலாவணை தெற்கு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான
துறைநீலாவணை தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சோ.சந்திரகுமர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னாள் தலைவரும் அதிபருமான மு.இராஜகோபால் ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி இந்து இளைஞர் மன்றத்தின் பொருளாளரும் கிராமசேவகருமான இ.விஜிதரன் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் பொருளாளர் தே.முகுந்தன் முன்னாள் செயலாளர் க.சதுசன் (சங்கீத்) ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கி வைத்தனர்
இச் சீருடைத் துணிகளை தைத்து வழங்குவதற்கான நிதி உதவியினை அவுஸ்ரேலியாவில் தொழில்புரியும் ச.வினோதன் ச.தீபன் ஆகியோர் வழங்கியுள்ளனர் அவர்களுக்கும் இந்து இளைஞர்மற்றத்தினர் நன்றிதெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment