Friday, 29 September 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்




ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் வாணி விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (29) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

Wednesday, 27 September 2017

பற்றைக் காடுகள் அழிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் காட்டு யானைகள் பதுங்கி நிற்கும் பற்றைக் காடுகள் இன்று (புதன்கிழமை) துப்பரவு செய்யப்பட்டன.

Tuesday, 26 September 2017

ஆலையடிவேம்பில் மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான காசோலைகள் கையளிப்பு




தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊருக்கு ஒரு கோடி மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது

haran

யு.எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்கள் தற்போது காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது இதனால் இப் பகுதி மக்கள் இரவு வேளைகளில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.

கிழக்கின் எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள்

(சப்னி அஹமட்)

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிழக்கின் எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு 2017.09.24 கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலையில் இடம்பெற்றது.

அறநெறிபாடசாலை சீருடை வழங்கிவைக்கப்பட்டது.

haran



இந்துக்கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் துறைநீலாவணை தெற்கு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான  
துறைநீலாவணை தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சோ.சந்திரகுமர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

சின்னம் சூட்டும் நிகழ்வு

(செ.துஜியந்தன்)

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.

Friday, 22 September 2017

இந்நாட்டிலே அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியல் சட்டமூலத்தை நிறைவேற்றவே பாடுபட்டு வருகின்றோம் – சந்திரிக்கா தெரிவிப்பு



 

இலங்கைத் திருநாட்டிலே அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியல் சட்டமூலத்தை நிறைவேற்றவே நாங்கள் பாடுபட்டு வருகின்றோம்.  தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி அவர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளுக்கு குறைவில்லாத அதிகாரங்களை தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கும் வகையில் அச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

Thursday, 21 September 2017

மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

(ரவிப்ரியா)

வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு போரதீவு பற்று கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் ஆகியோரின் வழிகாட்டலக்லுக்கமைவாகவும், அனுமதியுடனும் நடைபெற்றது. 24 மாணவர்களுக்கு பாதணிகள் சம்பிரதாயபுர்வமாக

மாடு மோதி விபத்து

haran

(சசி)
மட்டக்களப்பு தாழங்குடா தேவாலயத்திற்கு அண்மித்த பிரதான வீதியில் 2017.09.21 இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடு ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டி பாதையில் இருந்து தள்ளப்பட்டு பாரிய விபத்துக்குள்ளாகியது.

விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிப்பு




அண்மையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் நடைபெற்றுமுடிந்த இவ்வருடத்துக்கான மாகாண மற்றும் மாவட்ட மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் திறமைகளை வெளிப்படுத்திய இரண்டு போட்டியாளர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சட்டவிரோதமாக ஆற்று மண் ஒருவர் கைது

(க-சரவணன்)

மட்டக்களப்பில் இருந்து அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்திற்கு
சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று  மண் எடுத்துச் சென்ற ஒருவரை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை மீட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.

Tuesday, 19 September 2017

போதை ஒழிப்போம்

வாழைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில்  திங்கள் கிழமை (18) விழிப்பூட்டல் பேரணி ஒன்றினை

Sunday, 17 September 2017

அறநெறி பரிட்சை முன்னோடிக்கருத்தரங்கு

haran
              (ஜெ.ஜெய்ஷிகன்)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அறநெறிக்கல்வி இறுதியாண்டு பரிட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்களுக்கான முன்னோடிக்கருத்தரங்கு

Saturday, 16 September 2017

கொடிது கொடிது வறுமை கொடிது

நமது ஆசிரமம் ஆனது மனித முயற்சியால் ஆனதல்ல சாதாரண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு உள்ளாகி இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையில் ஒரு குருநாதரைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு சற்குருதேவர் கிடைக்கப்பெற்றார். இந்த யாத்திரை காலங்களில் எல்லாம் நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. 'கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது இளமையில் வறுமை கொடிது' என்று ஒளவைப்பாட்டி சொல்லியிருக்கிறார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் திறன் அபிவிருத்தி சந்தை

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் திறன் அபிவிருத்தி சந்தை இன்று (15.9.2017) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆசிரியை பிரியங்கனி திசநாயக்க அவர்களின் மொழிவிருத்தி, முகாமைத்துவ ஒழுங்கமைப்பில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

யானைகளினால் வீடுகளுடன் , குடும்பஸ்தர் ஒருவரும் பாதிப்பு

haran
(க.விஜயரெத்தினம்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் சனிக்கிழமை (16.9.2017) அதிகாலை 1.00 உள்நுழைந்த 10 மேற்பட்ட யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால்  சின்னவத்தையில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. வறுமைப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு  செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்து, நெல்லை மூடைகளில் சேமித்து தங்களின் குடிமனைகளில் வைத்துள்ளார்கள்.

Monday, 11 September 2017

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை


கடந்த (செப்டெம்பர்) 6 மற்றும் 7 ஆந் திகதிகளில் கண்டி, திகண விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவு சார்பாகக் கலந்துகொண்ட ராம் கராத்தே தோ (RAM KARATE – DO) சங்கத்தின் கராத்தே வீரர்களான கே.சாரங்கன், எஸ்.ரிசோபன் மற்றும் பி.ஷரோன் சச்சின் ஆகியோர் கலந்துகொண்ட குழு காட்டா (Team KATA) போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையின் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து குழு காட்டா பிரிவில் கலந்துகொண்ட ஒரு அணி பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Thursday, 7 September 2017

விபத்தில் பெண் பலி

haran
 நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

Monday, 4 September 2017

மஹா கும்பாபிஷேகம்


யாழ் ,   மாவிடடபுரம் செருக்கன் கிணற்றடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய  நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  03ம்  திகதி ஏவிளம்பி வருடம் ஆவணித்திங்கள் 18ம் நாள்  ஞாயிற்றுக் கிழமை உத்தராட நட்ஷத்திரமும் அமிர்தயோகமும் துவாதசி திதியும் கூடிய சுபவேளையில்   இடம் பெறுவதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில்  காணலாம்

Friday, 1 September 2017

ஞானவைரவர் ஆலய இன்று (02) எண்ணைக்காப்பு

 மாவிடடபுரம் செருக்கன் கிணற்றடி அருள்மிகு ஞர்னவைரவர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  03ம்  திகதி ஏவிளம்பி வருடம் ஆவணித்திங்கள் 18ம் நாள்  ஞாயிற்றுக் கிழமை உத்தராட நட்ஷத்திரமும் அமிர்தயோகமும் துவாதசி திதியும் கூடிய சுபவேளையில் காலை 07.45மணிமுதல் 08.52மணிவரையுள்ள கன்னிலக்ன  வேளையில்   இடம் பெறவுள்ளது