Tuesday, 9 August 2016

விவசாயி சடலமாக மீட்பு

அம்பாறை,நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியில்  வெற்றுக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் ஆண்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


 இவ்வாறு சடலமாக மீட்க்கப்படடவர் சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற 57 வயதுடைய விவசாயி, இன்று திங்கட்கிழமை (08) நண்பகல்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர். 

வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்காக குறித்தநபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் இன்று காலை வரை வீடு திரும்பாததையிட்டு உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். 
 

இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், அக்காணியில் வேறோரு பகுதியிலிருந்து மீட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்

No comments: