ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் கோழி வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டோருக்கு கோழிக்குஞ்சுகளை
வழங்கிவைக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்திலுள்ள கால்நடை
வைத்தியர் காரியாலயத்தில் இன்று (05) காலை இடம்பெற்றது.
கிழக்கு
மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அனுசரணையோடு குறித்த வைத்திய
நிலையத்தின் அரச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஐ.ரிப்கான் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு
அதிதியாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்
பணிப்பாளர் எம்.ஏ.நதீரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வாரியாகத் தெரிவு செய்யப்பட்ட
40 பயனாளிகளுக்கு தலா 10 குஞ்சுகள் வீதம் 160,000.00 ரூபாய்கள் பெறுமதியான 400
கோழிக்குஞ்சுகள் அதிதிகளால் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
No comments:
Post a Comment