Monday, 1 August 2016

நிலைமாறுநீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம்

நிலைமாறு காலகட்ட நீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஊடகங்களின் வகிபங்கு
 குறித்து கிழக்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வதிவிட செயலமர்வானது 30 (சனிக்கிழமை),  31 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களும் கல்முனை சூப்பர்ஸ்டார் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக் கருத்தரங்கில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.






முதல் நாள் (29) கருத்தரங்கானது  குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தலைமையில் ஆரம்பமானது.
நிலைமாறுகால கட்ட நீதிப் பொறிமுறையை செயற்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானம் குறித்த தகவல்களும் அதன் பின்னணிகளும், போருக்கு பின்னரான நிலைமாறு கால கட்டத்தில் செய்திகளை அறிக்கையிடுவதில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் குறித்த செயலமர்வில் ஆராயப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் (30) செயலமர்வுக்கு விரிவுரையாளராக இலங்கை
ஊட­க­வியல் கல்­லூரி விரி­வு­ரை­யாளர் எஸ்.ரி. பிருந்­திரன் அவர்கள் கலந்துகொண்டு விரிவுரையினை வழங்கினார்.
நிலைமாறுகால நீதியும் செய்திகளை அறிக்கையிடலும், நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தலில் ஊடகத்தின் வகிபாகம், சமாதானமும் தேசிய நல்லிணக்கமும், முரண்பாடுகள் போன்ற பல தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நாள் கருத்தரங்கானது முன்னெடுக்கப்பட்டது. 

மேலும் கருத்தரங்கில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: