Tuesday, 9 August 2016

சட்டவிரோதமாக 15 மாடு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இன்று (09) அதிகாலை மூடப்பட்ட லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 15 மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்கரைப்பற்று பொத்துவில்  பிரதான வீதியூடாக பயணித்த லொறியை சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக  சோதனையிட்ட போதே, மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட மாடுகளும் மாடுகளை ஏற்றி சென்ற லொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மாடுகளும் லொறியும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனத்தின் சாரதியும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான  விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: