Monday, 29 August 2016

மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாற்குட பவனி


அக்கரைப்பற்று அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் நான்காம்நாள் திருவிழாவின் விசேட சங்காபிஷேகப் பூஜைகளைச் சிறப்பிக்கும்வகையில் இன்று (30) காலை இடம்பெற்ற பாற்குட பவனியானது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நாதஸ்வரம், தவில் வாத்திய இசை முழங்க மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்தது.

துறைமுகத்தில் தீ

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. களஞ்சிய சாலையிலேயே இந்தத் தீ பரவியுள்ளதாக அறியமுடிகின்றது. 

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா


இலங்கை திருநாட்டின் கிழக்கு மாநிலத்தில் அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம்-தீர்த்தம் ஆகிய மகத்துவங்களோடு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் திருத்தலத்தில் துர்முகி வருடத்தின் ஆவணித்திங்கள் 10 ஆம் நாளான கடந்த 26-08-2016 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவத்தினைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழாவானது மஹோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று (28) உமை மைந்தன் வேழமுகத்து விநாயகனின் அருளோடு வெகுசிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.

Thursday, 25 August 2016

ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளும் பெற்றோரும் பங்குபெற்ற போஷாக்கு வழிகாட்டல் கருத்தரங்கு


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் சிறுவர் செயலகத்தின் போஷாக்கு வழிகாட்டல் கருத்திட்டத்துக்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று (25) காலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் இடம்பெற்றது.

Wednesday, 24 August 2016

தடுத்துநிறுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

கார்த்தி 

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோம்பக்கரச்சி வில்காமம் பகுதியிலுள்ள சுமார் 90 ஏக்கர் மேட்டுநிலக் காணியை அத்துமீறி வனபரிபாலன இலாகா கைப்பற்றும் முயற்சியை தடுத்துநிறுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tuesday, 23 August 2016

பெண்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

எஸ்.கார்த்திகேசு....

 கணவன்மார்களை பறிகொடுத்து குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மாதாந்தம் ஏதாவதொரு கொடுப்பனவை வழங்குவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியூடாக நடவடிக்கை எடுக்குமாறு திருக்கோவில் பிரதேசத்தைச்; சேர்ந்த

தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்

கணபதிப்பிள்ளை கரன்ராஷ் ...

பேரதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ஆம் வருட தமிழ் மாணவர்கள் மீது பெரும்பான்மையின மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Friday, 19 August 2016

தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மைதானங்களே ஏற்படுத்துகின்றன - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்


பாடசாலைகளில் தமது ஆரம்பக்கல்வியைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் முன்னர் சின்னஞ்சிறார்களைச் சமூகத்தோடு இணைக்கும் முக்கிய பணியினை முன்பள்ளிகளே செய்கின்றன. ஆடல், பாடல், விளையாட்டுக்கள் என சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒன்றாக ஈடுபடும்போது அங்கே சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, தோழமையுணர்வு, புரிந்துணர்வு என்பன உண்டாகி அவர்கள் தாம் வாழும் சமூகத்துக்கு இலகுவாக இயைபடையக்கூடிய நிலைமைகள் உண்டாகின்றன என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் குறிப்பிட்டார். 

Friday, 12 August 2016

ஆலயத்தில் படுகொலை 26ஆவது வருட நினைவுதினம்

அம்பாறை, வீரமுனைப் பிரதேசத்தில்  தமிழ் மக்கள் 155 பேர் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு 26ஆவது வருட நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது. வீரமுனை விசேட பூஜை வழிபாட்டுடன் ஆலயத்துக்கு அருகில்;

Thursday, 11 August 2016

தொடர்ந்து விளக்கமறியலில்

அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த சந்தேக நபரான தாயாரை எதிர்வரும் 23ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில்

Tuesday, 9 August 2016

சட்டவிரோதமாக 15 மாடு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இன்று (09) அதிகாலை மூடப்பட்ட லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 15 மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமி காணமற் போயுள்ளார்

 14வயது  சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) காணமற் போயுள்ளார்  

அதேதினத்தன்று சகோதரியின் கணவனும் தலைமறைவாகியுள்ளமை தொடர்ந்து 

விவசாயி சடலமாக மீட்பு

அம்பாறை,நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியில்  வெற்றுக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் ஆண்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Monday, 8 August 2016

கற்ற கல்வியை மட்டுமல்ல, கற்றுக்கொண்ட திறனையும் ஒருவரிடமிருந்து அழிக்கமுடியாது - பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்.


பசியோடிருப்பவனுக்கு மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள் என்று நம் மூதாதையர்கள் சொன்னதற்கு ஏற்றாற்போல வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து பாடசாலைக் கல்வியை முடித்த பெண் பிள்ளைகளுக்கு தையற்கலைப் பயிற்சிகளை வழங்குவதன்மூலம் அவர்களது குடும்பங்கள் கௌரவமான ஒரு தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தைக் கொண்டு நடாத்த உதவிபுரியும் இவ்வாறான தொழிற்பயிற்சிக் கூடங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்னும் பல தோற்றுவிக்கப்படவேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.

குருபெயர்ச்சி மகா யாகம்

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் குருபெயர்ச்சி மகா யாகம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் எனப்படும் வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகின்றார்.

Friday, 5 August 2016

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கோழி வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டோருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிவைக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்திலுள்ள கால்நடை வைத்தியர் காரியாலயத்தில் இன்று (05) காலை இடம்பெற்றது.

ஆடிப் பூரம்


ஆடிப் பூரத்தினை முன்னிட்டு பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் நேற்று (05)வெள்ளிக்கிழமை சிவஸ்ரீ .குமுதேஷ்வர சர்மாவினால்  பஞ்சாராத்தி காண்பிக்கப்படுவதையும் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும்  காணலாம்

குடும்பஸ்தன் வெட்டி கொலை

அம்பாறை திரக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் குடும்பஸ்தன் நேற்று 30 சனிக்கிழமை இரவு 11.00 மணியளவில்  வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்

Monday, 1 August 2016

சாராய போத்தல்கள்

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக சாராய போத்தல்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில்

நிலைமாறுநீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம்

நிலைமாறு காலகட்ட நீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஊடகங்களின் வகிபங்கு
 குறித்து கிழக்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வதிவிட செயலமர்வானது 30 (சனிக்கிழமை),  31 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களும் கல்முனை சூப்பர்ஸ்டார் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.