Friday, 28 February 2014

"நடமாடும் சேவை நிலைய மாற்றம் தொடர்பான அறிவித்தல்"

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 04-03-2014, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று - 7/4 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ள இடமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு அக்கரைப்பற்று - 7/4 இல் சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் அருகாமையிலுள்ள சமுக பராமரிப்பு நிலையத்தில் நடைபெறமாட்டாது.

தவிர்க்கமுடியாத சில காரணங்களால் குறிப்பிட்ட நடமாடும் சேவையானது பொது நூலகத்திற்கு அருகிலுள்ள ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் அன்றைய தினத்தில் (04-03-2014) நடாத்தப்படும் என்பதைக் குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இந்த மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

நேரலை ஒளிபரப்பு பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இருந்து மகா சிவராத்திரி நிகழ்வு.......

நேரலை ஒளிபரப்பு மகா சிவராத்திரி நிகழ்வு....
ஆலையடிவேம்பு பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் ஆலயபிரதம குரு சிவஸ்ரீ லோகனாதக்குருக்களால் பூசைந்நிகழ்வுகள் இடம்பெறுவதனை.....















“அக்கரைப்பற்று – 7/1 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமம் கிராமமாக – வீடு வீடாக என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று – 7/1 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை கடந்த 25-02-2014, செவ்வாய்க்கிழமை Assembly of God தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் இந்நடமாடும் சேவையைக் காலை 9.00 மணிக்குத் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார்.

குறித்த தேவசபைக்கான மதபோதகரின் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பமான இந்நடமாடும் சேவையில் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலக மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றதுடன் அப்பிரதேச சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்நடமாடும் சேவையின் ஆரம்பிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து அப்பிரதேச இளைஞர் கழக அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையுடன் இராம கிருஸ்ண மிசன் மத்திய மகா வித்தியாலய வீதியிலுள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

மேலும் அக்கரைப்பற்று – 7/3 கிராமசேவகர் பிரிவுக்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 03-04-2014, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திகோ/ கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி...

அக்கரைப்பற்று திகோ/ கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய அதிபர் பி.கிருஷ்னபிள்ளை தலமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி (புதன்கிழமை 26) நிகழ்வில்....












Thursday, 27 February 2014

"2014 ஆம் ஆண்டுக்கான நிருவாகக்குழுத் தெரிவுகள்"

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளன மற்றும் சமுர்த்தி மகா சங்கப் பயனாளிக் குழுக்களுக்கான 2014 ஆம் ஆண்டுக்குரிய நிருவாகக்குழுவினைத் தெரிவு செய்யும் கூட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் கடந்த 24-02-2014, திங்கட்கிழமை நடைபெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற ஆலையடிவேம்பு இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான நிருவாகக்குழுத் தெரிவுக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.எம்.மஜீத், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஜெயந்தன் ஆகியோருடன் சுமார் 130 க்கும் மேற்பட்ட பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ்வருடத்திற்கான நிருவாகக்குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் பிரதேச விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கடந்த வருடத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த இளைஞர் கழகங்களுக்கான பதிவுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அடுத்து இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி மகா சங்கத்தின் பயனாளிக் குழுக்களுக்கான நிருவாகக்குழுவினைத் தெரிவு செய்யும் கூட்டத்திற்கு சமுர்த்தி மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர்களான கே.அசோக்குமார், ரி.கமலப்பிரபா ஆகியோருடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 22 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விலும் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ்வருடத்திற்கான நிருவாகக்குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் ஒருவருட பதவிக்காலத்தைக்கொண்ட இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கிச்சங்கத்தினால் வழங்கப்படவுள்ள குறுநிதிக்கடன் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிவைப்பு"


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு 26-02-2014, புதன்கிழமை பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது 30 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக அடையாள அட்டைகள் பிரதேச செயலாளர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டன.

திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை அதிபர் கே.கிருபைராஜா தலமையில் (செவ்வாய்க்கிழமை 25) இடம்பெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில்...