ஹரன் -
பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர்
தேவஸ்தானத்தில் பரிகார இலிங்க ஸ்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை
07.21முதல்08.33வரையுள்ள சுப முகூர்த வேளையில் பிரதிஸ்டா குரு சிவஸ்ரீ
க.லோகநாதக்குருக்களால் பிரதிஸ்டை செய்யப்படுகின்றது
ஒருவர் முற்பிறவியில் செய்த தீவினைகளின் காரணமாக
இப்பிறவியில் திசாபுத்திகளின் தீய அமைப்பை பெற்று தீராதநோய்,பிணிகள்,
திருமணத்தடை,காலம்கடந்த திருமணம், நல்ல மணவாழ்கை அமையாமை, புத்திரபாக்கியம் இன்மை,
கல்வி இல்லாமை, வறுமை, மனக்குழப்பம் போன்ற துன்பம்களுக்கு ஆளாகின்றனர். இதனை
கருத்தில் கொண்டு இன்று ஸ்தாபனம் செய்யப்படும் பரிகார இலிங்கத்திற்கு பக்தர்கள்
தங்கள் கைகளாலேயே குருவின் வழிகாட்டலின்படி பரிகாரம் செய்வதட்காகவே
ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இப் பரிகார இலிங்கம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு
சித்தர்களால் ஆசிர்வதிக்கப்பேற்ற இயந்திரம் மூலிகைகள் உருத்திராட்சம் போன்றவைகளோடு
வைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment