இவ்வாண்டு முதல் 15 வயதினைப் பூர்த்திசெய்த அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் வழங்கப்படவுள்ள நவீன முறையிலமைந்த இலத்திரனியல் ஆளடையாள அட்டைகளுக்கான தனியான பிரிவொன்று ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான சேவைக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 30-01-2014, வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் திறந்துவைக்கப்பட்ட இப்பிரிவில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் இருவர் உட்பட மூவர் கடமையாற்றவுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவுள்ள குறித்த இலத்திரனியல் ஆளடையாள அட்டைகளுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள மரக்கறிப் பயிர்ச்செய்கைக்கான அறுவடையும் அன்றையதினம் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கத்தரி, புடோல் போன்ற மரக்கறிகள் அறுவடை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment