எதிர்வரும் 24-02-2014, திங்கட்கிழமை முதல் 08-04-2014, செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில், ஆலையடிவேம்பு பிரதேசதிலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் வாழும் பொதுமக்கள் பிரதேச செயலக மற்றும் இதர பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் சேவைகளைத் தங்களது பிரதேசத்திலேயே திட்டமிடப்பட்ட நாளில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் பரந்தளவிலான நடமாடும் சேவை நிலையங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்தக் கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை நிலையங்களுக்கு சமுகமளித்து தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்படி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை இயன்றவரையில் தங்களது நண்பர்களோடு பகிர்ந்து, இந்நடமாடும் சேவைகள் தொடர்பான செய்தி அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment