Saturday, 15 February 2014

வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் யுவதி ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்

ஹரனி

ஆலையடிவேம்பு வாச்சிக்குடா பிரதேசத்தில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில்  யுவதி ஒருவர் தீயில்; எரிந்து உயிரிழந்துள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
இவ்வாறு வாச்சிக்குடா தலைவர் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய தங்கராசா திவ்வியா என்பவரே உயிரிழந்துள்ளார்.







இச் சம்பவம்பற்றி தெரியவருவதாவது
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமையாக  காலை 9 மணிக்குபின்னர் நித்திரையில் இருந்து எழுவதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்டுவிட்டு தனது அறையில் படுக்கைக்குச் சென்று அறையில் கதவை உட்பகுதியால் பூட்டிவிட்டு யுவதி நித்திரையில் இருந்துள்ளார் எனவும்   சம்பவதினமான இன்று காலை 8.30 மணிக்கு தகப்பனார் வேலைக்குச்  சென்றுள்ளதுடன் தாயார் அருகில் உள் வீடு ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில்; வீட்டின் அறையில் நித்திரையில் இருந்துள்ள நிலையில் காலை 9.00 மணியளவில்  வீட்டின் அறை தீப்பற்றி எரிவதை கண்ட தாயார் சத்தமிட்டதையடுத்து அயவர்கள்  வந்து தீயை தண்ணீர்ஊற்றி கட்டுப்பாடில் கொண்டுவந்தனர்
இந்நிலையில் அறையின் கட்டிலில் நித்திரையில் இருந்த யுவதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் அவர் நித்திரையில் இருந்த அறையில் உள்ள அலுமாரி மற்றும் தளபாடங்கள் உடுப்புக்கள் உட்பட அறையில் இருந்த பொருட்கள் யாவும் மற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் வீட்டின் கூரை ஒருபகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. எனவும் இவ் தீவிபத்து மின்சார ஒழுக்கு காரணமான ஏற்பட்டது இல்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்






No comments: