இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 66 ஆவது சுதந்திரதின நிகழ்வானது அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராமய விகாரையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை
நீத்தை இராணுவ படையணியின் சிவில் இணைப்பாளர் மேஜர் என். நவரட்ண தலைமையில் மிகவும்
கோலாகலமாகவும் மூவின மக்களின் பங்களிப்புடனும் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 204 ஆவது படையணியின் பிரிகேடியர் எச்.ஆர்.கே.பீ. பீரிஸ் கலந்துகொண்டதுடன் சிறப்பு
அதிதிகளாக ஆலையடிவேம்பு, காரைதீவு
பிரதேச செயலாளர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரி, அக்கரைப்பற்று
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஆலையடிவேம்பு
பிரதேச சபையின் தவிசாளர், அரச
உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச கிராமிய சங்கங்களின் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டதுடன் அக்கரைப்பற்று, கல்முனை விகாராதிபதிகள், அக்கரைப்பற்று கிறிஸ்தவ தேவாலயத்தின் அருட்தந்தை, ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார், அக்கரைப்பற்று
பள்ளிவாசலின் மௌலவி ஆகியோரும் அருளாளர்களாகக் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்விற்கான ஆசியுரைகளையும் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புத்திஜீவிகளும், பாடசாலை சமுகங்களும் கலந்து சிறப்பித்ததுடன், மாணவர்களினால் மூவினக் கலாசாரங்களையும் பிரதிபலிக்குமுகமான
கலைநிகழ்வுகள் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
\
No comments:
Post a Comment