Sunday, 16 February 2014

டொல்பீன் வான் வீதியை விட்டு விலகி விபத்து

ஹரனி

அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் டொல்பீன் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு வாகனம் முற்றாக சேதமடை ந்துள்ளபோதிலும் சாரதி உட்பட இருவர்; தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.



இதுபற்றி தெரியவருவதாவது
பொத்துவிலைச் சேர்ந்தவர்கள் வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கொண்டு நேற்று இரவு திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து பொத்துவிலுக்கு இன்று சனிக்கிழமை   அதிகாலை 3 மணிக்கு சென்று வாடகை வானை விடுவித்தனர் இதனையடுத்து சாரதியும் அதன் உதவியாளரும் வேனில் மூதூருக்கு உடன் திரும்பி வேகமாக சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4.00 மணிக்கு  அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம்  வீதி வளைவில் வானின் ரயர்வெடித்ததையடுத்துவான் வீதியைவிட்டுவிலகி விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு வாகனம் முற்றாக சேதமடைந்தபோதும் சாரதியும் அதன் உதவியாளரும் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்
இச் சம்வத்தில் விபத்துக்குள்ளான வானை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்





No comments: