குடும்பஸ்தர் வீதியில் மரணம்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட செல்வராசா வீதி நாவட்காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகேந்திரராசா (வயது 49) நேற்று முன்தினம் செய்வாய்க்கிழமை மலை(11)அக்கரைப்பற்று சாகாமவிதி கோளாவில் பகுதியில் இறந்து கிடக்கக்கானப்பட்டார்.
இரு பிள்ளைகலின் தந்தையான இவர் நஞ்சுஅருந்தி தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது
அக்கரைப்பற்று பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் வருகைதந்த பொலிசார் மற்றும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி பிரேதத்தினை பார்வையிட்டபோது சடலத்திற்கு அருகில் நஞ்சுக்குப்பியும் காணப்பட்டது.
மரணமானவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தினை தொடர்ந்து மேலதிக வைத்திய பரிசோதனைக்காக பிரேதத்தினை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நீதிபதி பணித்ததுடன் மேலதிக விசாரனையினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment