Friday, 28 February 2014

“அக்கரைப்பற்று – 7/1 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமம் கிராமமாக – வீடு வீடாக என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று – 7/1 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை கடந்த 25-02-2014, செவ்வாய்க்கிழமை Assembly of God தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் இந்நடமாடும் சேவையைக் காலை 9.00 மணிக்குத் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார்.

குறித்த தேவசபைக்கான மதபோதகரின் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பமான இந்நடமாடும் சேவையில் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலக மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றதுடன் அப்பிரதேச சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்நடமாடும் சேவையின் ஆரம்பிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து அப்பிரதேச இளைஞர் கழக அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையுடன் இராம கிருஸ்ண மிசன் மத்திய மகா வித்தியாலய வீதியிலுள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

மேலும் அக்கரைப்பற்று – 7/3 கிராமசேவகர் பிரிவுக்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 03-04-2014, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: