Thursday, 4 April 2019

சட்டவிரோத கட்டுத் துப்பாக்கி





எஸ்.அபிவரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஆண் ஒருவரின் துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 03ம் திகதி இரவு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் வயது 25 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான புதன்கிழமை மாலை தனது கட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்குச் சென்றுள்ளார், அந்தவேளையில் தனது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: