haran
சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இன்று, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி முதல் நாளை, சனிக்கிழமை, காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

No comments:
Post a Comment