இன்று இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இந்த அறிவித்தலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக நேற்றும் நேற்று முன்தினமும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.