Tuesday, 2 April 2019

மேலதிக அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன்


அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக  வேதநாயகம் ஜெகதீசன் அவர்களை நியமிப்பதற்கான  கடிதம் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது 


தற்போது காரைதீவு பிரதேச செயலாளராக கடைமையாற்றிவரும் வே.ஜெகதீசன், 2001ம் ஆண்டு  திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவாகி   நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உதவி பிரதேச செயலாளராக தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார்.
அதன் பின்னர் சிறிது காலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக கடைமையாற்றி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றிருந்தார்.

haran

No comments: