Friday, 26 April 2019

சாய்ந்தமருது பகுதியில்

haran



சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.


அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.


இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இன்று, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி முதல் நாளை, சனிக்கிழமை, காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

சாய்ந்தமருது பகுதியில் வெடிச்சத்தங்கள்..


கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்பதாக செய்திகள் சொல்கின்றன.

சுனாமி குடியிருப்பு வட்டாரத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மேலதிக படைகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிகிறது


haran

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீடொன்று சோதனைக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று(26) ஜலால்தீன் வீதி, அட்டாளைச்சேனை நான்காம் பிரிவில் உள்ள வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Wednesday, 24 April 2019

தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

தகவல்களை வழங்கவென, 011-2434251, 011-4055105, 011-4055106, 076-6911604, 011-24333335 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இன்று (24ஆம் திகதி) முதல் புதிய சுற்றிவளைப்பு

 இன்று (24ஆம் திகதி) முதல் புதிய சுற்றிவளைப்பு 
பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று (24ஆம் திகதி) முதல் புதிய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக,

Tuesday, 23 April 2019

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!


இன்று இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு



குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் (AMAQ) வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பிட்டு ராய்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் தொடர்பில் அவதானம் தேவை உடன் அறியத்தரவும்....

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் தொடர்பில் அவதானம் தேவை உடன் அறியத்தரவும்....வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Monday, 22 April 2019

அவசர நிலை அமுலுக்கு

haran


அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும்.

இன்று தேசிய துக்கதினம

இன்று  தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sunday, 21 April 2019

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்  

நாட்டின்  இன்று காலை ​தொடக்கம் இடம்பெற்று வரும் அனர்த்த நிலைகளையடுத்து, மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்   அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

URGENT : அவசர வேண்டுகோள்!


URGENT : அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை

அவசர வேண்டுகோள்!

Saturday, 20 April 2019

5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள்

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Thursday, 11 April 2019

ஜஸ் போதைப் பொருளுடன்


எஸ். அபிவரன்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய ஆண் ஒருவரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

Friday, 5 April 2019

பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில்

இன்று எமது கமு /திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில்

வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதி

haran

தற்பொழுது நிலவும் வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

Thursday, 4 April 2019

🤷‍♂️🤷‍♀️முதலாம் தவணை விடுமுறை 5 ஆம் திகதி ஆரம்பம்🤷‍♂️🤷‍♀️

முதலாம் தவணை விடுமுறை 5 ஆம் திகதி ஆரம்பம்



2019 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரத்துடனான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதல் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. 2 ஆம் தவணை இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை பாடசாலை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை 5 ஆம் திகதி ஆரம்பம் Rating: 4.5 Diposkan Oleh: Team

அலரிமாளிகையின் முன்னால் தற்கொலை


விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்

சட்டவிரோத கட்டுத் துப்பாக்கி





எஸ்.அபிவரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஆண் ஒருவரின் துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 03ம் திகதி இரவு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Tuesday, 2 April 2019

மேலதிக அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன்


அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக  வேதநாயகம் ஜெகதீசன் அவர்களை நியமிப்பதற்கான  கடிதம் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது 

Monday, 1 April 2019

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 15 இலட்சம்

haran


கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலய பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

சிவஸ்ரீ. சி.கு.மகாலிங்கசிவம் குருப்பட்டம் தரித்தார்


.
(சித்தா)
வெல்லாவெளியைச் சேர்ந்த பூசகர் வி.கு.சிவகுரு கண்மணி தம்பதியின் சிரேஸ்ட புதல்வன் சிவஸ்ரீ. சி.கு.மகாலிங்கசிவம் குருக்கள் 35 ஆம் கிராமம் படலைக்கல் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா நாராயண தேவஸ்தானம் பிரதமகுரு, வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் முன்னாள் பிரதம குரு அவர்களுக்கு

தீயிட்டு கொலை ஒருவர் கைது


(எஸ்.அபிவரன் )
வாழைச்சேனை   விநாயகபுரம்  பகுதியில்   ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து  கருகி உயிரிழந்துடன்  தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலீசார் தெரிவித்தனர் .