Sunday, 8 July 2018

நால்வரையும் தேடும் பணி


அம்பாறை – தமன, எக்கல்ஓயாவிற்கு சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



பதுளையிலிருந்து பாடசாலை சுற்றுலா சென்றவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எக்கல்ஓயாவில் தோணியொன்றில் பயணித்தபோது, இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோணியில் 9 பேர் பயணித்ததுடன், ஏனைய ஐவரும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர் ஒருவர் மற்றும் பாதுகாவலரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.


அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எக்கல ஏரியில், படகில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரில், மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, கந்தன சீவல வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போயுள்ள மற்றையவரை தேடும் நடவடிக்கைகள் தீவரப்படுத்தப்பட்டுள் -ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த, ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர், சுற்றுலாவை மேற்கொண்டு, அங்கு விஜயம் செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும், வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான எக்கல ஏரிக்கு அருகிலுள்ள சுற்றுலா விடுதியில், கடந்த 07ஆம் திகதி இரவு தங்கியுள்ளனர்.
மறுநாளான நேற்றுக்காலை, அக்குழுவிலிருந்த சிலர், அங்கு படகுகள் இரண்டை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டிருந்த படகொன்றில் ஏறி, ஓயாவுக்கு அருகிலேயே சென்றுவிட்டனர்.
அவ்விரண்டு படகுகளும், நீண்ட கயிற்றாலேயே ஒன்றோடு ஒன்றாக கட்டப்பட்டிருந்துள்ளது.
ஏரிக்குள் சுமார் 200 மீற்றர் தூரம்வரையிலும் அந்தப் படகு சென்றபோது, கயிறு அறுந்து, இவ்விரு படகுகளும் வேறாகிவிட்டன.
அதன்போது, படகொன்றிலிருந்த ஒரு பிரிவினர் மற்றொரு படகின் மீதேறுவதற்கு முயன்றுள்ளனர். இதன்போதே, அதிலொரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், இணைக்கப்பட்ட அந்த படகை, துடுப்புக்கட்டையின்றி, சிறிய தடியொன்றால் செலுத்தப்பட்டதாகவும், அப்படகை, திருப்புவதற்கு முயன்ற போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
படகு கவிழந்ததன் பின்னர், அபாயகுரல் ஏழுப்பப்பட்டுள்ளது. அத்துடன், கரையிலிருந்தவர்களும் உதவி குரல் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, விரைந்து செயற்பட்ட மீனவர்கள், நீரில் தத்தளித்து கொண்டிருந்த சிலரை காப்பாற்றி கரைச்சேர்ந்தனர். மீனவர்களும் இரண்டு, தனித்தனி படகுகளில் சென்றே, இவ்வாறு காப்பாற்றியுள்ளனர். அதன்போது, ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர். என்று அறியமுடிகின்றது.
ஐவரையும் மீட்டுக்கொண்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது, அதிலொரு படகும், ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், அந்த படகிலிருந்த மீனவர்கள், படகை மீண்டும் நிலைநிறுத்தி, கரைச்சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகளில், பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு, கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் இணைந்து மேற்கொண்டனர். அதன்போதே, நால்வரும் சடலங்களாக நேற்றுமாலை மீட்கப்பட்டனர்.

கிழக்கின் ஆறு ஒன்றில் நீரில் மூழ்கி நால்வர் மாயம் !! சுற்றுலா சென்ற அதிபர், மாணவர்கள் மூழ்கியுள்ள சம்பவம் !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: