வண்மையாக கண்டிக்கின்றோம், த.தே.கூ பிரதேச சபை உறுப்பினர் த. சுபோகரன்
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் தாயுதீன் அட்டாகாசத்தினை நாங்கள் வண்மையாக கண்டிக்கின் றோம் பொத்துவில் பிரதேச சபையில் உறுப்பினர் ஒருவரது செயற்பாட்டினால் தமிழர்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் என பிரதேச சபை உறுப்பினர் சுபோகரன் தெ ரிவித்தார்
மேலும் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற பொத்துவில் பிரதேசசபை கூடடத்தில் தமிழ் உறுப்பினர் ஒருவரது கேள்விக்கு பதிலளிக்க தவிசாளரை வினவியபோது இடைநடுவில் குறுகிடட தாயுதீன் தவறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி இனநல்லுறவினை சீர் குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் இதனால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தவறாக பார்க்கும் நிலை காணப்படுகின்றது
பொத்துவில் பிரதேச சபையில் மொத்தமாக 21 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் இவற்றுள் 01 பெண் தமிழ் உறுப்பினர் உட்பட 05 தமிழ் உறுப்பினரும் உள்ளனர் எனினும் தமிழ் உறுப்பினர்களது சகோதரத்துவ நல்லுறவானது இவரைப்போன்ற ஒரு சிலரால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தினை நாங்கள் விரக்த்தியுடன் பார்க்க வைக்கின்றன
எனவே இவ்வாறாண சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளும் சமூக வலைத்தளத்தில் பதிவேறுகின்ற உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளும் ஒரு இனத்தின் மேலான அபிப்பிராயம் தப்பானதாக பார்க்கப்படுகின்றது என்பதுடன் இவரது இவ்வாறான செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்
No comments:
Post a Comment