Wednesday, 11 July 2018

பாலியல் துஷ்பிரயோகம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.


வெல்லாவெளி கணேசபுரம் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தாய்க்கும் தெரிந்துள்ளது. இருந்தும் குறித்த தாய் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது கணவரை பாதுகாத்து வந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி வேறு கிராமத்தில் உள்ள தனது சகோதரியிடம் தனக்கு நடந்த கதியை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் சகோதரி அவர்களது வீட்டுக்கு பக்கத்திலுள்ள வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து பக்கத்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய தந்தையையும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

இதேவேளை இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் !! கொடூர செயல் !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: