Monday, 2 July 2018

சில ஆடைகள் வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினா அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சில ஆடைகள் வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.


கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த ஆடைகள் மற்றும் தலை முடிக்கு அணியும் கிளிப் ஆகியவை நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி சிறுமி றெஜினாவின் சடலம் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதியாகியிருந்தது.

பின்னர் படுகொலை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட வனப்பகுதியில் பொலிசாரின் தேடுதலில் கிடைத்த தடையங்கள் ! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: