Friday, 6 July 2018

ஒருவர் குமுக்கனில் மரணமாகியுள்ளார்.


கதிர்காமப் பாதயாத்திரையில் சென்ற பாதயாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் மரணமாகியுள்ளார்.

இவர் காரைதீவைச் சேர்ந்த எஸ்.விஜயசிங்கம் (வயது70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை சின்னவன் மேசிலார் என அழைப்பதுண்டு.


இச்சம்பவம் நேற்று (5) வியாழக்கிழமை 12மணியளவில் சம்பவித்துள்ளது.

அவர் காட்டுப்பாதை திறந்து முதல்நாள்(4) தனது மகளுடன் பயணித்துள்ளார். அன்றிரவு வாகூரவட்டையில் தங்கிய அவர்கள் மறுநாள் குமுக்கனைச்சென்றடைந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

அங்கிருந்து பாணமை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் பிரேதபரிசோதனை மற்றும் விசாரணைக்காக பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதபரிசோதனை மரணவிசாரணை இடம்பெற்றபின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
கதிர்காமப் பாதயாத்திரையில் சென்ற யாத்திரிகர் ஒருவர் மரணம் !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: