Monday, 16 July 2018

விபத்தில் பெண் உயிரிழப்பு


அம்பாறை - கொணடுவடுவான கங்கையின் அருகாமை வீதியில் பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்றின் சில்லு,திடீர் என பேருந்தில் இருந்து தனியாக கழன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இந்நிலையில், உந்துருளியினை செலுத்திய பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் பெண் காயமடைந்து அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிதகளுகம பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து அம்பாறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.



பேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: