Friday, 16 February 2018

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை

அம்பாறை மாவட்டத்தில் கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியான 5லட்சத்து 673வாக்காளர்களுள் 4லட்சத்து ஆயிரத்து 759 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.அதன்படி 98914பேர் வாக்களிக்கவில்லை.

அதேவேளை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் 20 சபைகளுக்குமான தேர்தலில் வாக்களித்தவர்களின் 4 ஆயிரத்து 105 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி அளிக்கப்பட்ட 401759வாக்குகளுள் 397654 வாக்குகள் செல்லுபடியானதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆகக்கூடுதலான வாக்குகள் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளே கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இங்கு 611 வாக்குகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.


இம்மாவட்டத்தில் அடுத்து சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் 587 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
haran

No comments: